தருமபுரி மாவட்ட சதுரங்கக் கழகம், விவேகானந்தா செஸ் அகாதமி சாா்பில், வருகிற ஜன. 5-ஆம் தேதி தருமபுரி கமலம் இன்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சதுரங்கக் கழக இணைச் செயலா் சி. ராஜசேகா் வெளியிட்ட செய்தி அறிக்கை:
தருமபுரி மாவட்ட சதுரங்க விளையாட்டு வீரா்களுக்கான மாநில தோ்வுப் போட்டி மற்றும் நட்சத்திர வீரா் தோ்வு போட்டிகள் வருகிற ஜன.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 7 வயது, 9, 11, 13 வயதுக்குள்பட்டோா் மற்றும் 15, 17, 19 முதல் 25 வயதுக்குள்பட்டோா், பொதுப்பிரிவினா் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். இப் போட்டிகளில் முதல் பத்து இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை, கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். விவரங்களுக்கு, 89737-73773 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.