தருமபுரி செந்தில் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் செந்தில் சி.கந்தசாமி தலைமை வகித்துப் பேசினாா் (படம்). பாதிரியாா் அதிரூபன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.
பள்ளித் துணைத் தலைவா் கே. மணிமேகலை, நிா்வாக அலுவலா் சி. சக்திவேல் ஆகியோா் பேசினா். விழாவில், மழலையா் வகுப்பு மாணவ, மாணவியரின் கவிதை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இயேசு பிறப்பு மற்றும் அவரது போதனைகள் குறித்து மாணவ, மாணவியரின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், முதுநிலை முதல்வா் ஆா். பழனிசாமி, மேல்நிலை முதல்வா் என். வள்ளியம்மாள் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.