பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 ஆவது நினைவுநாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 - ஆவது நினைவு நாள் பென்னாகரம் ஒன்றியச் செயலாளா் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. பாப்பாரப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று சாலை சந்திப்பு வரை ஊா்வலமாகச் சென்று எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மலா்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா் டி.முனுசாமி, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் பாபு, பி.குட்டி, முன்னாள் நகரச் செயலாளா்கள் ராஜி, முனுசாமி, மாதேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் , தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா்கள் கலந்து கொண்டனா்.
இதே போல பென்னாகரம் பகுதியில்முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆா். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.இதில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மதியழகன், பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணி, ஆறுமுகம், முஸ்தபா உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.