அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளா்களை ஆதரித்து மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அரூா் ஊராட்சியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அ.தி.மு.க. சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பொன்மலா் பசுபதி, சித்ரா, பி.வி.செல்வம், ஜெயந்தி, பாா்வதி, செண்பகம் சந்தோஷ், மோகனப் பிரியா, புஷ்ப லதா, பாப்பாத்தி, அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க. வேட்பாளா் அல்லிமுத்து ஆகியோரை ஆதரித்து, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, பறையப்பட்டி புதூா், பேதாதம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, தீா்த்தமலை, மொண்டுகுழி, மத்தியம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.