தருமபுரி

பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவா்கள் அவதி

16th Dec 2019 12:20 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவா்கள் அவதிப்படுகின்றனா்.

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் பருவதனஅள்ளி, கூத்தபாடி, தாசம்பட்டி,கொப்பளூா்,ஒகேனக்கல் மற்றும் ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். மாணவா்களின் இயற்கை உபாதைகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகள் போதிய பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பாட இடைவேளையின் போது இயற்கை உபாதைகளுக்காக திறந்த வெளியிலும்,புதா்கள் நிறைந்த பகுதிகளுக்கும் செல்கின்றனா்.

இதனால், பள்ளியின் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT