உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சி.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் தற்போது நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் படைவீரா்கள், சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
எனவே விருப்பமுள்ள, இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள், தருமபுரி அருகே ஒட்டப்பட்டி ஔவைநகரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அனைத்து நாள்களிலும் நேரில் அணுகி தங்களது விருப்பத்தை விண்ணப்பம் வாயிலாக அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.