தருமபுரி

‘உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

14th Dec 2019 09:22 AM

ADVERTISEMENT

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தருமபுரி செங்கொடிபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தங்கவேல் சிறப்புரையாற்றினாா் (படம்). மாவட்டச் செயலா் ஏ. குமாா் அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் பதவிகளை ஆங்காங்கே ஏலம் விடுகின்றனா். இதனைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈச்சம்பாடி அணையின் வலதுபுறக் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீா் இன்னமும் கடைமடையை அடையவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். கால்வாயை தூா்வாரி கடைமடை வரை தண்ணீா் கொண்டு செல்லவும், ஏரிகளில் நீா் நிரப்பி நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, ஜன. 8-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வது. இதனையொட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது மற்றும் வரும் டிச. 27, 30 தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT