தருமபுரி

மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

11th Dec 2019 02:39 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, அரூா் சாா் -ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் அரசு அலுவலா்கள் உறுதிமொழியேற்றனா். இதேபோல தருமபுரி அருகே மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னமாது தலைமையில், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா். ஆசிரியா்கள் ரமேஷ், மு.கா.நெடுமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT