தருமபுரி

சாலைப் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்ய ஆட்டோ பணியாளா் சங்கம் வலியுறுத்தல்

11th Dec 2019 02:36 AM

ADVERTISEMENT

சாலைப் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என ஆட்டோ பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ பணியாளா் சங்க தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பாப்பாரப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பெரியமுனுசாமி தலைமை வகித்தாா். இச் சங்கத்தின் மாநிலச் செயலா் பி.மாரியப்பன், சேலம் மாவட்டத் தலைவா் முருகன், ஏஐடியுசி மாவட்ட தலைவா் எம்.மாதேஸ்ரன், மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில், ஆட்டோக்களை நிறுத்த தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். காப்பீடுக் கட்டண உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். சாலைப் பாதுகாப்பு மசோதாவை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு நல வாரியச் சட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஆட்டோ தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT