தருமபுரி

கிணற்றிலிருந்து விவசாயி சடலம் மீட்பு

11th Dec 2019 02:40 AM

ADVERTISEMENT

அரூா் அருகே கிணற்றில் கிடந்த விவசாயி சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஜம்மனஹள்ளி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் மகன் பெரியண்ணன் (37). இவா், மது பழக்கம் உள்ளவராம்.

இந்த நிலையில், இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில், வீட்டில் இருந்து வெளியில் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, நாரணாபுரம் பகுதியிலுள்ள விவசாயி முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில் பெரியண்ணன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் காா்த்திக் (33) அளித்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT