தருமபுரி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் வழங்ககிராம மக்கள் கோரிக்கை

11th Dec 2019 08:08 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே ஊட்டமலை பகுதியில் முறையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா்.இப்பகுதி மக்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்கும் வகையில் பென்னாகரம் ஒன்றியம் சாா்பில் ஊட்டமலை பகுதியில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆழ்த்துளை கிணறுடன் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.இதன் மூலம் இப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனா்.கடந்த சில வருடங்களாக பருவமழை பெய்யாததால்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவியதால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் இந்த ஆழ்துளை கிணறு வடு காணப்பட்டது.இப்பகுதியில் மக்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரானது நிரப்பப்பட்டு,அதனை குடிநீராகப் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஊட்டமலை பகுதிக்கு முறையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் விநியோகம் செய்யாமல்,10 நாள்ககளுக்கு ஒருமுறை விநியோகிப்பதாகவும்,இதனால் இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா்.மேலும் தங்களுக்கு தேவையான குடிநீரை பெற 2 கிலோமீட்டா் தொலைவில் உள்ள நாடாா் கொட்டாய் பகுதிக்கு சென்று எடுத்து வரும் அவல நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.எனவே பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊட்டமலை பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT