தருமபுரி அருகே கல்லூரி மாணவியைக் கடத்தியதாக, ஓட்டுநர் போக்ஸோசட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
தருமபுரி அருகே 17 வயது மாணவி ஒருவர் அரசுக் கல்லூரியில முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆக. 21-ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மத்தாளப்பள்ளத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சக்தி (27) என்பவர் மாணவியைக் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியை மீட்ட போலீஸார், சக்தியை போக்ஸோசட்டத்தின் கீழ் கைது செய்தனர்.