தருமபுரி

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

29th Aug 2019 09:04 AM |  தருமபுரி / கிருஷ்ணகிரி,

ADVERTISEMENT

தருமபுரியில் வருகிற ஆக. 30-ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற ஆக. 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
 கிருஷ்ணகிரியில்...
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆக. 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள், தங்களது குறைகள், ஆலோசனைகளையும் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் .
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT