தருமபுரி

ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் தொடக்கம்

27th Aug 2019 10:48 AM

ADVERTISEMENT

ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் படிப்புடன் கூடிய பட்டப் படிப்புகள் தொடக்க விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மூக்காரெட்டிப்பட்டி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில்,  4 ஆண்டு ஒருங்கிணைந்த பாடப் பிரிவுகளை ஸ்டான்லி  கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.முருகேசன் தொடக்கி வைத்தார். இந்த விழாவில்,  செயலர் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், கல்லூரி முதல்வர் எஸ்.மணிமொழி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். 
ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படிக்கும் பி.எட் மற்றும் எம்.எட் பாடப் பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில், இளநிலை கலை அறிவியல் பாடப் பிரிவுகளுடன் இணைந்து பி.எட் படிக்கும் வகையில் ஸ்டான்லி கல்வியியல் கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதாவது, 4 ஆண்டுகளில் படிக்கும் வகையில் ஒருங்கிணைந்த பாட வழியில் பி.ஏ., பி.எட்.,  பி.எஸ்சி., பி.எட் ஆகிய படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம்,  வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகள் உள்ளன.
இளநிலை கலை அறிவியல் பட்டப்படிப்பு 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளைச் சேர்த்து 5 ஆண்டுகள் படிக்கும் நிலையில், தற்போது 4 வருட ஒருங்கிணைந்த பாடவழியில் பி.எஸ்சி., பி.எட், பி.ஏ.பி.எட் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டிருப்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT