தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு

27th Aug 2019 10:47 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
 இது குறித்து கல்லூரி முதல்வர் பா.கார்த்திகேயன் திங்கள்
கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : 
பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019 - 20-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
 எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம்),  எம்.எஸ்சி (கணிதம்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வுகள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி  மாலை 4 மணி வரையிலும் நடைபெறுகிறது. எனவே, மாணவர்கள் தங்களது கல்விச் சான்றுகளுடன் கல்லூரிக்கு நேரில் வரலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT