தருமபுரி

இந்திய குடியுரிமை வழங்க ஈழத் தமிழர்கள் கோரிக்கை

27th Aug 2019 10:48 AM

ADVERTISEMENT

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி, ஈழத் தமிழர்கள்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது குறித்து,  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை ஈழத் தமிழர் குடியிருப்பு வாசிகள் தலைவர் தே.சகாயநாதன் தலைமையில் அளித்த மனு:  தருமபுரி மாவட்டம், வாணியாறு அணை முகாமில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியமர்த்தப்பட்டு  வசித்து வருகிறோம். சுமார் 220 குடும்பங்களில் குழந்தைகள்,  பெரியவர்கள் என மொத்தம் 708 பேர் இம்முகாம் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறோம். இதுநாள் வரை, நாங்கள் எவ்வித தொந்தரவுமின்றி, அரசின் அனைத்து நல உதவிகளைப் பெற்றுவருவதோடு, தமிழகத்தையே பூர்வீகமாக நினைத்து, எவ்விதக் கருத்து வேறுபாடின்றி மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறோம். சற்றேறக்குறைய 29 ஆண்டுகளாக  எங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நாங்கள், இனியும் இலங்கை செல்ல விரும்பவில்லை. ஆகவே,  நாங்களும், எங்களது பிள்ளைகளும் மீதமுள்ள காலத்தை தமிழகத்திலே வாழ, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT