அரூரில் சமூக சேவகர் அன்னை தெரசாவின் 109ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூர் வட்ட அன்னை தெரசா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டாரத் தலைவர் மு.பிரேம்குமார் தலைமை வகித்தார்.
விழாவில், அன்னை தெரசாவின் உருவப் படத்துக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், பேரவைத் துணைத் தலைவர் பி.பழனிதுரை, நிர்வாகிகள் தேசம் சுகுமார், வேடியப்பன், முத்துலட்சுமி, துர்கா, காயத்ரி, பள்ளி ஆசிரியர்கள் வேடியப்பன், கனகராஜ், ஜெயவேல், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி அன்னை தெரசா பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை செஞ்சிலுவை சங்கத் தலைவர் வி.தேவராசு தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயின் கோட், இனிப்பு, காரம், உணவு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு சங்கர் கேப் உரிமையாளர் ஆர்.உமாபதி, ஆர்.எல்.ஆர்.இண்டேன் கேஸ் ஜே.லதா, ஜெயம் கிருஷ்ணமூர்த்தி, அரிசி மண்டி பழனி செட்டி, ஆர்.கே. ஓட்டல் எம்.ராஜா, கே.வி.ஆர். மளிகை ஆர்.அச்சுதன், ஆர்.லாலாலஜபதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி எழுத்தர் மதியழகன் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பதி வரவேற்றார். திம்மராயன் நன்றி கூறினார்.