தருமபுரி

சிறந்த நகராட்சி விருது: வணிகர் சங்கத்தினர் பாராட்டு

23rd Aug 2019 08:52 AM

ADVERTISEMENT

சிறந்த நகராட்சி விருதைப் பெற்ற தருமபுரி நகராட்சி நிர்வாகத்துக்கு, அனைத்து வணிகர் சங்கத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர்.
 தருமபுரி நகராட்சியை, தமிழக அரசு சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்து, அதற்கான விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ.15 லட்சத்தை சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரியிடம் வழங்கினார்.
 சிறந்த நகராட்சி விருதைப் பெற்ற நகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரியை, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.வைத்திலிங்கம், செயலர் டி.எஸ்.கிரிதர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT