தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் இன்று மாணவர் சேர்க்கை

16th Aug 2019 09:01 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) இறுதிகட்ட மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் பா. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
 பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் இளம்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் துறைகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.
 இதற்காக மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரிக்கு நேரில் வரலாம் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT