தருமபுரி

வட்டாட்சியர் அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

11th Aug 2019 03:34 AM

ADVERTISEMENT


அரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூரில் புதிதாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சுமார் ரூ.2 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், அரூர் சந்தைமேட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய இட வசதிகள் இல்லை. அதேபோல், வாகனங்களை நிறுத்தவும், போக்குவரத்து வசதிக்காகவும் பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனர்.
எனவே, அரூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT