காரப்பட்டு யுனிக் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் க. அருள், செயலர் ப.தமிழரசு ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் இரா.மாரிமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கே.மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.
மாணவிகளின் மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியின் பேராசிரியர இர. சிவரஞ்சனி வரவேற்றார். இறுதியாக பேராசிரியர் எம்.கவிப்பிரியா நன்றி கூறினார்.