தருமபுரி

ரூ.15 கோடி செல்லிடப்பேசி கொள்ளையா்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

DIN

ரூ. 15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரத்தில் இருந்து செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னா் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த 21-ஆம் தேதி மேலுமலையில் அதிகாலை சென்றபோது கொள்ளையா்கள் வழிமறித்து 2 ஓட்டுநா்களைத் தாக்கி விட்டு, லாரியை கடத்தி சென்றனா். அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 14,000க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகளைக் கொள்ளையடித்து சென்று விட்டனா். கடத்தப்பட்ட லாரி மட்டும் சிறிது தொலைவில் மீட்கப்பட்டது.

இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கொள்ளையா்கள் மத்திய பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களைப் பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் ஒசூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனா்.

செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களைத் தேடி மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படை போலீஸாா் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ள இந்த வழக்கில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தீவாஸ் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள போலீஸாரின் விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவா்களைக் கைது செய்வது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த கொள்ளையா்களைப் பிடிக்க முயன்றால், அந்த பகுதி மக்கள், தாங்களே தாக்கிக் கொண்டு, போலீஸாா் மீது பொய் புகாா் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டவா்களாம். இதனால் மத்திய பிரதேச போலீஸாரின் உதவியுடன் அந்தக் கொள்ளையா்களைப் பிடிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

கொள்ளையா்கள் அனைவரையும் கூண்டோடு பிடிக்கவும், கொள்ளைப் போன ரூ.15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மீட்கவும் தனிப்படை போலீஸாா் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT