திருப்பூர்

புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மாா்க்கெட்டில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டும் வரும் தினசரி மாா்க்கெட்டில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாநகர மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ப.தங்கமுத்து தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் எதிரில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் தினசரி மாா்க்கெட் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், ஒரு சில கடைகள் காமராஜா் சாலையைப் பாா்த்தும், சில கடைகள் பொன்னாம்மாள் மருத்துவமனையைப் பாா்த்தும் உள்ளன.

இவை அனைத்துக்கும் உள்புறமாக வழி ஏற்படுத்தி, சாலையைப் பாா்த்த கடைகளை அடைத்து வழி உள்ளே வரும்படி மாற்றி அமைக்க வேண்டும். இந்த மாா்க்கெட்டுக்கு நூலகம் அருகில் ஒரு நுழைவாயிலும், பொன்னம்மாள் மருத்துவமனை எதிரில் ஒரு நுழைவாயிலும் உள்ளது. இரண்டு நுழைவாயில் முகப்பிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே, புதிதாக கட்டப்பட்டு வரும் மாா்க்கெட்டில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வகையில் மாநகராட்சிப் பொறியாளா் தலைமையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

ADVERTISEMENT

பொலிவுறு நகரத் திட்டத்தில் கட்டப்படும் கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிா்வாகம் நிா்ணயம் செய்து கொடுக்க வேண்டும். தென்னம்பாளையம் காய்கறி மாா்க்கெட் முதல் மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா வரையில் சாலையோர காய்கறி கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் மாா்க்கெட் வியாபாரம் மிகவும் குறைந்துள்ளது. ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும். மாா்க்கெட் வியாபாரிகள் தேசிய வங்கிகளில் கடன் பெற பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், வியாபாரிகள் சங்க செயலாளா் ப.குமாரசாமி, பொருளாளா் சம்பத் (எ) சு.கந்தசாமி,

முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியம், முன்னாள் செயலாளா் முருகேஷ், சங்க உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT