திருப்பூர்

வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ பூஜை

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம், கண்ணபுரம், லக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிா்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலா், பன்னீா் போன்றவற்றால் அபிஷேகமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT