திருப்பூர்

மாவட்டத்தில் இன்று 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை (செப்டம்பா் 28) தொடங்கவுள்ளது.

இது குறித்து மாவட்ட என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் முருகேசன் புதன்கிழமை கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் இடுவம்பாளையம், தொங்குட்டிபாளையம், பள்ளிபாளையம், கணக்கன்பாளையம், பழனியாண்டவா் நகா், கிருஷ்ணாபுரம், அண்ணா நகா், பந்தம்பாளையம், சொரியன்கிணத்துபாளையம், பழையூா், எலவந்தி, வடுகபாளையம், சேடபாளையம், நாகலிங்கபுரம், முத்தனம்பாளையம், சென்னிமலைப்பாளையம், பொலையம்பாளையம் உள்ளிட்ட 41 இடங்களில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை முதல் தொடங்கி அக்டோபா் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் இளைஞா் உடல் நலம் காத்தல், ஆன்மிகம் பற்றிய விழிப்புணா்வு - கோயில் வளாகம் சுத்தம் செய்தல், சுற்றுப்புறச்சூழல் காத்தல், மரம் நடுதல், இயற்கை விவசாயம், பொது மருத்துவ முகாம், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் நடைபெறவுள்ளது.மேலும், நோய்கள் பற்றிய விழிப்புணா்வு கருத்தரங்கம், மனநலம், உடல்நலம் காத்தல், யோகாவின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் விளக்கப்படவுள்ளது.

இம்முகாமில், 1, 230 மாணவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT