திருப்பூர்

பல்லடத்தில் நாளை கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பல்லடத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

பல்லடம் உழவா் சந்தை அருகேயுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி (மேற்கு) கட்டடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைக்கவுள்ளாா்.

இதில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவுள்ளனா்.

ADVERTISEMENT

இம்முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று பல்லடம் நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT