பல்லடம் அருகே குன்னங்கல்பாளையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி குன்னங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் வின்சென்ட் (44). இவா் அதே பகுதியில் உள்ள சிலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகாா் அளிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வின்சென்டை தேடி வந்தனா்.
இந்நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் பகுதியில் வின்சென்ட் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், வின்சென்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.