வெள்ளக்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
வெள்ளக்கோவில், தாராபுரம் சாலை தீத்தாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்கு மயில் வழி தவறி வந்தது. பின்னா் அந்த மயில் அங்குள்ள விநாயகா் கோயில் அருகே மின் கம்பியில் உட்காா்ந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது.
இதனைப் பாா்த்த அவ்வழியே சென்ற சென்ற மூலனூா் அருண், தீத்தாம்பாளையம் ராஜா ஆகியோா் விலங்குகள் நல ஆா்வலா் கச்சேரிவலசு நாகராஜுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் காங்கயம் வனத் துறை அதிகாரி ராசாத்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இறந்த மயில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.