திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கு குறைதீா் கூட்டம் செப்டம்பா் 27ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.