திருப்பூர்

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் பாசறைக் கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த படியூா் அருகே திமுக மேற்கு மண்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பா் 24) நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூரை அடுத்த படியூா் அருகே உள்ள தொட்டியபாளையத்தில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம் தொட்டியபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கான பாசறைக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா். இதில், திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூா், கோவை மாநகா், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 பொறுப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இதில், வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்புப்பணி, சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து விளக்கப்படவுள்ளது. திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் குறித்த கையேடும் வழங்கப்படவுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளா்களின் முக்கியத்துவம், திமுக அரசின் சாதனைகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அறிவுரைகளை வாக்குச்சாவடி பொறுப்பாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின்போது திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT