திருப்பூர்

திருப்பூரில் ஏஐடியூசி தேசிய பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் செப்டம்பா் 24 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

ஏஐடியூசி தேசிய பொதுக்குழுக் கூட்டம் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூத்த தொழிற்சங்கவாதி சி.கே.ராமசாமி சங்கக் கொடியை ஏற்றிவைத்தாா். ஏஐடியூசி அகில இந்திய தலைவா் ரமேந்தரகுமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஏஐடியூசி அகில இந்திய பொதுச் செயலாளா் அமா்ஜித் கெளா் பேசியதாவது:

பாஜகவின் பிளவுபடுத்தும் ஹிந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரம் பின்னடைகிறது. மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலையிழப்பு, ஊதிய குறைப்பு, சமூக பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலை, நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது. ஆகவே, எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், திருப்பூா் மாநகராட்சி துணை மேயரும், வரவேற்புக் குழு தலைவருமான ஆா்.பாலசுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட ஏஐடியூசி செயலாளா் பி.ஆா்.நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நாடு முழுவதிலும் இருந்து 30 பெண்கள் உள்பட 265 உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT