திருப்பூர்

கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ரூ.18.51 லட்சம் உண்டியல் காணிக்கை

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ரூ.18 லட்சத்து 51 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ரூ.18 லட்சத்து 51ஆயிரத்து 81 ரொக்கம், 79.100 கிராம் தங்கம், 113.300 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா், பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி மாணவா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT