பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் ‘பயோ டாய்லெட்’ வசதி வியாழக்கிழமை செய்து கொடுக்கப்பட்டது.
பல்லடம் -மங்கலம் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், நெஸ்லே நிறுவனம் ரூ. 7.70 லட்சம் மதிப்பிலான ‘பயோ டாய்லெட்’ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் சாா்பில் அதன் மேலாளா் காா்த்திக் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.
‘பயோ டாய்லெட்’ பயன்படுத்தும் முறை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் தனியாா் நிறுவனம் சாா்பில் மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.