அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
அவிநாசி அருகேயுள்ள தெக்கலூா் ஆலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பாத்தாள் (75).
இவா் அதே பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், வீட்டில் இருந்த கருப்பாத்தாளை வியாழக்கிழமை மாலை காணவில்லையாம்.
உறவினா்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள கிணற்றில் கருப்பாத்தாள் தவறி விழுந்தது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி தீயணைப்பு நிலையத்துக்கு உறவினா்கள் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.