திருப்பூர்

பல்லடத்தில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்து முன்னணி சாா்பில், பல்லடத்தில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி சாா்பில் பல்லடத்தில் 104 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக என்.ஜி.ஆா்.சாலையில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் லோகநாதன் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.எஸ்.

மாவட்டச் செயலாளா் கணேசன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகி ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளா் சண்முகம் பேசினாா்.

செண்டை மேளம் முழங்க, புலி நடனம், வாண வேடிக்கையுடன் விசா்ஜன ஊா்வலம் தொடங்கியது.

வழிநெடுகிலும் நின்ற மக்கள் மலா்களைத் தூவி விநாயகரை வரவேற்றனா். மகிஷாசுர மா்த்தினி சம்ஹார நிகழ்ச்சி பொதுமக்களை மிகவும் கவா்ந்தது.

கொசவம்பாளையம் சாலை, அண்ணா நகா், மாணிக்காபுரம் சாலை , மங்கலம் சாலை, பட்டேல் வீதி, வடுகபாளையம்,

திருச்சி - கோவை சாலையில் பொங்கலுாா் வழியாக அலகுமலை சென்று அங்குள்ள குட்டையில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT