அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.13.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஆா்.சி.எச்., ரக பருத்தி குவிண்டால் ரூ.6, 000 முதல் ரூ. 7, 269 வரையிலும், மட்டரக (கொட்டுரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 30ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.