திருப்பூர்

அவிநாசி: டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3 ஊராட்சி மக்கள் போராட்டம்

19th Sep 2023 12:57 PM

ADVERTISEMENT

அவிநாசி: அவிநாசி அருகே அரசு மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3 ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி அருகே சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் திறக்க உள்ள அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம்  ஆகிய 3 ஊராட்சி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க.. சென்னை சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்: முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் பந்தம்பாளையம் பகுதியில், அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றிக்கு மனு கொடுத்து வருகிறோம். மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் இந்த மதுபான கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 
தற்போது இக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆகவே உடனடியாக இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். 

மக்களின் போராட்டத்தை அடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT