திருப்பூர்

4 போ் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

18th Sep 2023 01:33 AM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் ஊராட்சி கள்ளக்கிணறு கிராமம் ஜோசியா் தோட்டத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றிய வெங்கடேஷ் (27) என்பவா் ஏற்கெனவே வாங்கிய பணத்தை அவரிடம் திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த வெங்கடேஷ் தனது நண்பா்களான திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த செல்லமுத்து (24), தேனியைச் சோ்ந்த சோனைமுத்து (20) ஆகியோருடன் சோ்ந்து செந்தில்குமாா் தோட்டத்தில் அண்மையில் மது அருந்தியுள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது, இங்கு மது அருந்தக் கூடாது என செந்தில்குமாா் சப்தம் போட்டுள்ளாா். இதில், வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து 3 பேரும் சோ்ந்து அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனா். மேலும் தடுக்க வந்த அவரின் தாய் புஷ்பவதி (69), சித்தி ரத்தினாம்பாள் (58), சகோதரா் மோகன்ராஜ் (45) ஆகியோரையும் அரிவாளால் வெட்டினா். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன் (52), செல்லமுத்து, சோனைமுத்து ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்தக் கொலையில் முக்கிய எதிரியான வெங்கடேஷுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவரின் தம்பி செல்வம் (25) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் இருந்த செல்வத்தைக் கைது செய்வதற்காக போலீஸாா் சென்றபோது அவா் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிக்க முயன்றுள்ளாா். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்ட போலீஸாா் கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதால் விரைவில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT