அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் திருப்பணியையொட்டி, அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா் கோயில் விமானங்கள் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அவிநாசியப்பா், கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், நவக்கிரகம் ஆகியவற்றின் விமானங்கள், உலோக உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றுக்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்று பாலாலாயம் செய்யப்பட்டது. இவ்விழாவில், அவிநாசி வாகீசா் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை சுவாமிகள், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் ரவி பிரகாஷ், பொன்னுசாமி, காா்த்திகா ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை இணைஆணையா் குமரதுரை, ஆய்வாளா் செல்வப்பிரியா, கோயில் செயல் அலுவலா் பெரியமருதுபாண்டியன், உபயதாரா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.