திருப்பூர்

ரூ.25.90 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

4th Oct 2023 01:58 AM

ADVERTISEMENT

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.25.90 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 945 மூட்டை நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் தரம் ரூ.8,000 முதல் ரூ.8,356 வரை, இரண்டாம் தரம் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை, மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,000 வரை, பச்சை நிலக்கடலை ரூ.4,200 முதல் ரூ.5,000 வரை விற்பனையானது.

ஏலத்தில் மொத்தமாக ரூ.25.90 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT