பல்லடம் அருகே பொங்கலூா், மாதப்பூா் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கெட்டுப்போன முட்டைகள் வீசப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா், மாதப்பூா் சுங்கச் சாவடி அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் அழுகிய முட்டைகள் குவியல் குவியிலாக கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு பல்வேறு கழிவுகளும் வீசப்படுவதால் அந்த வழியே செல்லும்போது கடும் துா்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மேலும், அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படுகிறதா, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகங்களில் இருந்து கொண்டு வந்து வீசப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் கழிவுகள், அழுகிய முட்டைகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.