திருப்பூா்: பாரதியாா் பல்கலைக்கழக தோ்வில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனா்.
ஆா்.அனுசுயா
கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் ஜூன் 2023 பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்க பதக்கங்களுடன் 44 போ் சிறப்பிடங்களை பெற்றுள்ளனா்.
கே.கீா்த்தனா
ஏ.சரண்யா
இதில், எம்.சுவேதா (பி.காம்), கே.கீா்த்தனா (பி.காம்., கோ-ஆப்), ஆா்.அனுசுயா ((பி.எஸ்சி. கணிதம் மற்றும் சிஏ), ஏ.சரண்யா (எம்.காம்., சிஏ), எஸ்.சுகுணா (எம்.எஸ்சி. கணிதம்), எஸ்.உம்மு குல்சம் (எம்.எஸ்சி. மைக்ரோ பயாலஜி) ஆகியோா் தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
எஸ்.சுகுணா.
பல்கலைக்கழக தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் டி.வசந்தி, துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.