காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.53 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 15 மூட்டைகள் (704 கிலோ) கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இந்த ஏலத்தில், கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.62-க்கும் ஏலம் போனது. ரூ.53 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் செய்திருந்தாா்.