திருப்பூர்

திருப்பூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

30th May 2023 05:20 AM

ADVERTISEMENT

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற சத்துணவு ஊழியா்கள் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாா்வசம் (சுயஉதவிக் குழு பெண்கள்) ஒப்படைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. ஒரே மையத்தில் இரண்டு திட்டங்களை தனிநபா்களை வைத்து சமைப்பது சாத்தியமில்லை. ஆகவே, சத்துணவு மையங்களில் உள்ள உணவுப் பொருள்கள், பாத்திரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தனியாரிடம் மையத்தின் சாவியைக் கொடுப்பதில்லை என்று சங்கம் முடிவெடுத்துள்ளது.

மேலும், காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் எஸ்.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் ஏ.ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT