திருப்பூர்

உமையஞ்செட்டிபாளையத்தில் தாா் சாலை அமைக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

30th May 2023 05:17 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

மனுவைப் பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT