திருப்பூர்

விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கண் சிகிச்சை முகாம்

30th May 2023 05:21 AM

ADVERTISEMENT

திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மேகாலயா மற்றும் மணிப்பூா் மாநிலங்களின் முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இந்த முகாமில் பங்கேற்றவா்களுக்கு கண்புரை நோய், நீா் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண், சீழ்நீா் வடிதல், தூரப்பாா்வை, கிட்டப்பாா்வை ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் பங்கேற்ற 541 பேரில் கண்புரை உள்ள 74 போ் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT