திருப்பூர்

ஆனைமலை- நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடைப்பயணம்

DIN

ஆனைமலை- நல்லாறு அணைத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி ‘நம்ம நல்லாறு’ நடைப்பயணத்தை பல்லடத்தில் ஜூன் 10, 11,12 ஆகிய தேதிகளில் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பொங்கலூா், காங்கயம், திருப்பூா் தெற்கு நிா்வாகிகள் கூட்டம் பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா்.

பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி வரவேற்றாா். நடைப்பயண இயக்க அவசியம் குறித்து மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் உரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) பாசனத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் நீா் பற்றாக்குறையை போக்கிடவும், பாசன விவசாயிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பயிா் செய்து உணவு உற்பத்தியை பெருக்கிடவும், ஆனைமலையாறு- நல்லாறு அணைத் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும். அவ்வப்போது, நிபுணா் குழுவை அமைப்பதுபோன்ற அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது.

இருப்பினும் திட்டம் குறித்து போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, தாமதம் செய்யாமல் இந்த அணைத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ‘நம்ம நல்லாறு’ நடைப்பயணம் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் பல்லடம் அருள்புரத்தில் தொடங்கி பொங்கலூா், குண்டடம்,

குடிமங்கலம் வழியாக உடுமலையில் அடைந்து அங்கு கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

10 ஆம் தேதி நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு ஆகியோரும், 12 ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் பெ.சண்முகமும் பேசுகின்றனா். என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், விவசாய சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT