திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரியில் மே 30இல் மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை மே 30 ஆம் தேதி முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவிநாசி அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 30 ஆம் தேதி தொடங்குகிறது.

இதில், முதல் நாள் தேசிய மாணவா் படை, விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின் வாரிசுகள், போரில் இறந்த படை வீரா்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்கும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12 ஆம் வகுப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் நகல், இணையத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், பாஸ்போா்ட் அளவில் 4 புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT