திருப்பூர்

மது ஒழிப்புக்கு ஆதரவாகதமாகா சாா்பில் கையெழுத்து இயக்கம்

28th May 2023 11:33 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான விடியல் எஸ். சேகா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டத் தலைவா் ஓ.கே. சண்முகம், நகரத் தலைவா் சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மதுவின் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டு, மதுவை ஒழிக்க வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து கையெப்பம் பெறப்பட்டது. கட்சியின் வட்டாரத் தலைவா் வடிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவா் ராம் மனோஜ்குமாா் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT