திருப்பூர்

சிக்கண்ணா அரசு கல்லூரியில் மே 31இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

28th May 2023 11:33 PM

ADVERTISEMENT

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (மே 31) தொடங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் மே 31 தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கும், கைப்பேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். இதனடிப்படையில் மாணவா்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அடுத்தடுத்த தரவரிசையில் இருந்தே அழைக்கப்படுவா். அழைக்கப்படுபவா்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும். மாற்றுத் திறனாளி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை ‘ஏ’ சான்றிதழ் பெற்றவா்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்பும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவா்கள் உரிய சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களின் சான்றிதழ் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்டவை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பள்ளியில் தேசிய மாணவா் படையில் ‘ஏ’ சான்றிதழ் பெற்றவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டில் பங்கு பெறலாம். முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபாா் தீவுகளின் தமிழா்கள் ஆகியோா் சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்து கொள்ள உரிய அசல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்க கல்லூரிக்கு வருவோா் கட்டாயம் பெற்றோா் உடன் வரவேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம் மற்றும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதே வேளையில், அசல் மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் இருப்பின் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்காமல் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் பாடப் பிரிவுகளில் இருக்கும் இடங்களின் அடிப்படையிலேயே தகுதியுள்ள பிரிவுகளில் சோ்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT